"இந்த மென்பொருளானது சபரி சுத்த திருக்கணித பஞ்சாங்கம், கற்பகம் சுத்த திருக்கணித பஞ்சாங்கம் மற்றும் கற்பகம் சுத்த வாக்கிய பஞ்சாங்கம் ஆகியவற்றின் ஆசிரியரும் திருக்கணித ஆரிய சூரிய சித்தாந்த வாக்கிய கணிதங்களில் வல்லுநருமான சபரி எஸ்.எம்.சதாசிவம் அவர்களால் உருவாக்கப்பட்டது."

நமது மென்பொருளில் ( Software ) கணித்துத்தரப்படும் கிரகஸ்புஸ்டங்கள் எமது கிரகஸ்புட கணிதம் நூலின் சூத்திரங்களைக் கொண்டு கணிக்கப்பட்டது. நாசா உள்பட அனைத்து மேலை நாட்டு எபிமெரிஸ்களுக்கு இணையானது. வாக்கிய மென்பொருளில் ( Software ) கணிக்கப்படும் கிரகஸ்புடங்கள் பல்வேறு ஓலைச் சுவடிகள் மற்றும் வரருசியின் வாக்கிய கரணம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு கணிக்கப்பட்டதாகும்.

நமது மென்பொருளின் அனைத்து மாடல்களிலும்

1. கே.பி., சபரி, லஹரி, ராமன், வாசன் ஆகிய அயனாம்சங்களில் தாங்கள் விரும்பிய அயனாம்சத்தைத் தேர்ந்தெடுக்கும் வசதி. இவையன்றி தங்களது சொந்த   அயனாம்சத்தை உள்ளீடாகக் கொடுக்கும் வசதி.
2. தேவையான ஜாதகங்களை நூற்றுக் கணக்கில் பதிவு செய்து கொள்ளும் வசதி.
3. பதிவு செய்யாத போதிலும் கடைசியாக கணித்த ஜாதக விபரத்தைத் திரும்ப எடுக்கும் வசதி.
4. அழகிய எழுத்துருவில் பிரிண்ட் ரிப்போர்ட் - ஆகிய வசதிகள் உண்டு.