வானசாஸ்திரத்தின் துல்லியமான விதிகளின்படி கணிக்கப்படுவதே திருக்கணிதமாகும். அதில் சரியான அயனாம்சத்தைப் பயன்படுத்துவதாலேயே சரியான ஜாதகத்தைக் கணிக்கமுடியும். அந்த வகையில் நமது சபரி பஞ்சாங்கத்தின் அயனாம்சத்தைப் பின்பற்றி இந்த மென்பொருள் ( Software ) உருவாக்கப்பட்டுள்ளது. ஆயினும் தாங்கள் விரும்பிய வேறு எந்த அயனாம்சத்தையும் இதில் பயன்படுத்தி ஜாதகங்களைக் கணித்துக் கொள்ளலாம்.இதில் சபரி, ஆனந்தபோதினி , வாசன் ஆகிய பஞ்சாங்கங்களையும், கேபி, லஹரி, பிவிராமன் ஆகிய அயனாம்சங்களையும் பின்பற்றி கணிதம் செய்து கொள்ளலாம். இந்த மென்பொருள் (Software) கீழ்கண்ட மாடல்களில் கிடைக்கும்.

1. ஒருபக்கம்.
2. ஒருபக்கம் - ஜாதகரின் பயோடேட்டா - வரன் பார்ப்பதற்காக.
3. 13 பக்கம்.
4. 21 பக்கம்.
5. 35 பக்கம்.
6. 55 பக்கம்.
7. 130 பக்கம் (தசாபுக்தி பலன்கள் பாடல்கள் விளக்கம் மற்றும் பரிகார மந்திரங்களுடன்).

"இவற்றில் இராசி, நவாம்சம், கிரக ஸ்புடங்கள், பாவஸ்புடங்கள், அஷ்டவர்க்கம், ஷோடசவர்க்கம், உபக்கிர ஸ்புடங்கள், பஞ்சபட்சி, ஷட்பலம், காலச்சக்கர திசை, தசாபுக்தி பலன்கள் - பரிகாரம் மற்றும் பரிகார மந்திரங்கள் ஆகியவை அடங்கியுள்ளன."

நமது முற்கால ஞானிகளால் உருவாக்கப்பட்ட சித்தாந்தங்களே வாக்கிய சித்தாந்தங்களாகும். இவற்றுள் ஆரிய சித்தாந்தம் குறிப்பிடத் தகுந்ததாகும். இச்சித்தாந்ததிற்கு வரருசி என்பார் வாக்கியங்களை உருவாக்கினார். அந்த வரருசியின் வாக்கியத்தைப் பின்பற்றி உருவாக்கப்பட்டதே நமது வாக்கிய கணித மென்பொருள் ( Software ) ஆகும். இதில் சபரி வரருசி வாக்கியப் பஞ்சாங்கம், அசல் 28நெ. பாம்புப் பஞ்சாங்கம்,திருநெல்வேலி, ஆற்காடு, ஸ்ரீரங்கம், ராமநாதபுரம், மருத்துவக்குடி வாக்கியப் பஞ்சாங்கங்கள், சேலம் நம்பெருமாளையர் வாக்கியப் பஞ்சாங்கம் மற்றும் திருக்கோவில் அனுஷ்டான வாக்கியப் பஞ்சாங்கம் ஆகியவற்றில் தங்கள் விருப்பத்திற்கேற்ற பஞ்சாங்கப்படி ஜாதகங்களைக் கணித்துக்கொள்ளலாம். இந்த மென்பொருள் ( Software ) கீழ்கண்ட மாடல்களில் கிடைக்கும்.

1. ஒரு பக்கம்.
2. ஒருபக்கம் - ஜாதகரின் பயோடெட்டா - வரன் பார்ப்பதற்காக.
3. 13 பக்கம்.
4. 20 பக்கம்.
5. 33 பக்கம்.
6. 50 பக்கம்.
7. 125 பக்கம் ( தசாபுக்தி பலன்கள் பாடல்கள் விளக்கம் மற்றும் பரிகார மந்திரங்களுடன்).
இவற்றில் இராசி, நவாம்சம், கிரக ஸ்புடங்கள், பாவஸ்புடங்கள், அஷ்டவர்க்கம், ஷோடசவர்க்கம், உபக்கிரக் ஸ்புடங்கள், பஞ்சபட்சி, காலச்சக்கர திசை, தசாபுக்தி பலன்கள் - மற்றும் பரிகார மந்திரங்கள் ஆகியவை அடங்கியுள்ளன.

நமது பாரம்பரிய ஜோதிடர்கள் முத்து முத்தான கையெழுத்தில் ஆதியந்தப்பரம நாழிகை செல் இருப்பு கணித்து துருவத்துடன் எழுதித் தரும் கையால் எழுதப்பட்ட ஜாதகத்தைப் போன்ற வடிவமைப்பில் உருவாக்கப்பட்ட மென்பொருள் ( Software ) இதுவாகும்.

இந்த மென்பொருள் ( ) கீழ்கண்ட மாடல்களில் கிடைக்கும்.

1. திருக்கணிதம் :
       1. 46 பக்கம்.
       2. 130 பக்கம் (தசாபுக்தி பலன்கள் பாடல்கள் விளக்கம் மற்றும் மந்திரங்களுடன்).
2. வாக்கிய கணிதம் :
       1. 46 பக்கம்.
       2. 130 பக்கம் (தசாபுக்தி பலன்கள் பாடல்கள் விளக்கம் மற்றும் மந்திரங்களுடன்).

இவற்றில் இராசி, நவாம்சம், கிரக ஸ்புடங்கள், பாவஸ்புடங்கள், அஷ்டவர்க்கம், ஷோடசவர்க்கம், உபக்கிரக ஸ்புடங்கள், பஞ்சபட்சி, ஷட்பலம், காலச்சக்கர திசை, தசாபுக்தி பலன்கள் - பரிகாரம் மர்றும் பரிகார மந்திரங்கள் ஆகியவை அடங்கியுள்ளன.

ஆண், பெண் இருவரது ஜாதகத்திற்கும் நட்சத்திரப்பொருத்தம், தோஷ சாம்யம், தசாசந்தி, செவ்வாய் தோஷ ஆய்வு மற்றும் பீஜ க்ஷேத்திர ஸ்புடங்களைக் கொண்டு புத்திர தோஷ ஆய்வு ஆகியவற்றைக் கணித்து திருமணப்பொருத்தம் பார்க்கும் மென்பொருள் ( Software ). இது ஒரு பக்கம் மற்றும் பத்து பக்கம் ஆகிய இரண்டு மாடல்களில் கிடைக்கும். திருக்கணித மற்றும் வாக்கிய கணிதம் ஆகிய இரண்டு முறைகளிலும் உள்ளது.

கே.பி.முறை என்னும் கிருஷ்ணமூர்த்தி பத்ததி முறையானது அமரர். பேராசிரியர்.திரு.கே.எஸ்.கிருஷ்ணமூர்த்தி அவர்களால் உருவாக்கப்பட்ட முறையாகும். நமது மென்பொருள் ( ) கீழ்கண்ட வசதிகளுடன் கிடைக்கும்.

1. பிறப்பு நேர ஜாதகம் திரையில் பாவச்சக்கரம், கிரகங்கள் மற்றும் பாவங்களின் ஸ்புடங்கள், அவற்றின் இராசி அதிபதி, நட்சத்திர அதிபதி ஆகியவற்றோடு உப நட்சத்திர அதிபதிகள் 9 வரை ( உபநட்சத்திர அதிபதி(1), உப உப நட்சத்திர அதிபதி(2), உப உப உப நட்சத்திர அதிபதி(3), உப உப உப உப ....) காணும் வசதி.
2. மேற்கண்டவற்றிற்கு ஆளும் கிரகங்களின் ( Ruling Planet) தொடர்பு - அவற்றை பல வண்ணத்தில் சுட்டிக்காட்டும் வசதி.
3. ஒவ்வொரு கிரகத்திற்கும் தசா புத்தி அந்தரம் சூட்சுமங்களைக் கணித்து அவை குறிகாட்டும் பாவங்கள் மற்றும் கிரகங்களை பல வண்ணத்தில் சுட்டிக் காட்டும் வசதி.
4. ஒவ்வொரு கேள்வி கேட்கும் நேரத்திற்கும் ஆளும் கிரகங்களைக் கணிக்கும் வசதி.
5. ஜாதகம் கணிக்கும் நேரத்திற்கு ஆரூட ஜாதகம் கணித்து அதற்கு மேலே சொல்லப்பட்ட அனைத்து வசதிகளையும் பயன்படுத்தும் வசதி.
6. வளர்நிலை ஜாதகம் ( Progression Chart ).
7. அயனாம்சம் : கே.பி., சபரி, லஹரி, ராமன், வாசன் ஆகிய அயனாம்சங்களில் தாங்கள் விரும்பிய அயனாம்சத்தைத் தேர்ந்தெடுக்கும் வசதி. இவையன்றி தங்களது சொந்த அயனாம்சத்தை உள்ளீடாகக் கொடுக்கும் வசதி.
8. தேவையான ஜாதகங்களை நூற்றுக்கணக்கில் பதிவு செய்யும் வசதி.
9. பதிவு செய்யாத போதிலும் கடைசியாக கணித்த ஜாதக விபரத்தைத் திரும்ப எடுக்கும் வசதி.
10. அழகிய எழுத்துருவில் பிரிண்ட் ரிப்போர்ட் - ஆகிய வசதிகள் உண்டு.

இது ஒரு ஆரூட முறையாகும். சினேந்திரமாலை முதலான நூல்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டதாகும்.
1. ஆரூட ஜாதகத்தையும் கோட்சார ஜாதகத்தையும் ஒரே திசையில் காணும் வசதி.
2. உதயம் கணிப்பதற்கு காலை 6 மணி முறை, சூரிய உதய முறை ஆகிய இரண்டு முறைப்படியும் கணிக்கும் வசதி.
3. சாதாரண முறையில் உதயம் கணித்தல் மற்றும் நட்சத்திர ஹோரா முறைப்படி உதயம் மற்றும் 12 பாவங்களையும் கணிக்கும் வசதி.
4. ஆரூட நேரம் 1 நிமிடம், 1 நிமிடம் 40 செகண்டு, 5 நிமிடம் ஆகிய மூன்று நேரங்களுக்குக் கணிக்கும் வசதி.
5. அனைத்துக் கிரகங்கள் உபக்கிரகங்கள் ஜாமக்கோள்கள் ஆகியவற்றிற்கு ஸ்புடம் பாதசாரம் உபநட்சத்திரங்கள் கணிக்கும் வசதி.
6. கோட்சார சந்திரனுக்கு மட்டுமல்லாது அனைத்துக் கோட்சாரக் கிரகங்களுக்கும் ஜாமக்கோள்களுக்கும் தசாபுத்திகள் கணிக்கும் வசதி.
7. மேற்கண்ட தசாபுத்திகள் 120வருட முறை, 1 வருடம், 1 மாதம், 1 நாள் ஆகிய ஏதேனும் ஒரு முறையில் கணிக்கும் வசதி.
8. கோட்சார கிரகங்களை திருக்கணித முறை அல்லது வாக்கிய முறையில் கணிக்கும் வசதி.
9. மேற்கண்ட அனைத்து விபரங்களையும் பிரிண்ட் எடுக்கும் வசதி.